விநாயகர் என்ற சொல் சிறப்பான தலைவன் அல்லது தலைவர்களுக்கெல்லாம் தலைவன் எனப்பொருள்படும். எந்தக்கடவுளை வழிபட்டாலும் முதலிலே வழிபடப்படும் தெய்வம் விநாயகக் கடவுள் ஆகும்.
விநாயகரின் தோற்றம் பற்றி சம்பந்தரின் பினரும் தேவாரம் விளக்கி நிற்கிறது.
"பிடியதன் உறுஉமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடுமவர் இடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை இறையே"
"உமை பெண் யானையின் உருவெடுத்தார். சிவன் ஆண் யானையின் வடிவெடுத்தான். இருவரும் இணைந்தனர், தன்னை வழிபடுகிறவர்களது துன்பங்களை நீக்குகின்ற கணபதி பிறக்குமாறு சிவன் இவ்வாறு அருள் செய்தார்" என்பது அப்பாட்டின் பொருள்.
நாம் எழுதத்தொடங்கும் முன் "உ" எனும் பிள்ளையார் சுழி போட்டே எழுத்தொடங்குவது வழக்கம். விநாயகர் ஓங்கார வடிவினர். அ+உ+ம் எனும் மூன்றேழுத்துகளின் கூட்டொலியே ஓம். அதன் நடுவேழுத்தான உகர வடிவமே பிள்ளையார் சுழி. மஞ்சள் சாணம் , சந்தானம் முதலியவற்றால் பிள்ளையாரைப் பிடித்து வைத்தால் அவர் அனைவருக்கும் அருள்பாலிக்க எழுந்தருளுவார். விநாயகருக்குரிய மலர்களாக அறுகு எருக்கம்பூ வெள்ளெருக்கம்ப சூரியகாந்தி,அலரி, மருது, மாதுளம், செண்பகம், பாதிரி என்பன கூறப்படும். பத்திரங்களாக வன்னி, வில்வம், ஊமத்தை,நொச்சி, நாயுருவி,கத்தரி என்பன கூறப்படும், துளசி விநாயகருக்கு ஆகாது
விநாயகருக்குரிய விரதங்கள்
››››› சுக்கில சதுர்த்தி ‹‹‹‹‹
ஒருமுறை தேவர்கள் மகிழ விநாயகர் கைலாயத்தில் நடனமாடினார். விநாயகரின் நடனத்தைகண்டு சந்திரன் எள்ளி நகையாடினார். அதனால் கோபமடைந்த விநாயகர் சந்திரனைப் பார்க்கும் யாவரும் துன்பம் அடைவர் எனச் சபித்தார். தன்னிலை உணர்ந்த சந்திரன் மனிப்பு வேண்டினான். விநாயகரும் சுக்கிர சதுர்த்தியில் சந்திரனைக் காண்பவர்கள் பெரும்துன்பம் அடைவார்கள் என்றும் ஆனால் ஆவணி திங்கள் சுக்ல சதுர்த்தியில் தன்னை வணங்கினால் துன்பம் நீங்கி இன்பம் பெறுவார் என்றும் அருளினார். ஆகையால் ஆவணிமாத வளர்பிறை நான்காம் நாளில் (சுக்ல சதுர்த்தி) விநாயகரை வணங்குவோம் தொல்லை நீக்கி நலம் பெறுவார். ஆதலால் இது விசேடமான நாளாகும். விநாயகரின் (ஜென்ம) நாளாகவும் போற்றப்படுகிறது. இதனால் நினைத்த காரியம் கைகூடும்
ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை நான்காம் நாள். வளர்பிறை நான்காம் நாள் என்பன முறையே சங்கடஹர சதுர்த்தி விரதமாகவும், சதுர்த்தி விரதமாகவும் அனுஷ்டிக்கப்படும். இவ்விரதங்களால் தீராத துன்பங்கால் , கூன் குருடு செவிடு முதலியன நீங்கும், செல்வம் பெருகும், கல்வி சிறக்கும்.
››››› விநாயகர் ஷஷ்டி விரதம் ‹‹‹‹‹
கார்த்திகை மாத தேய்பிறை பிரதமை முதல் மார்கழி மாத வளர்பிறை ஷஷ்டி வரையிலான இருபத்தொரு நாட்கள் கொண்ட விரதமாகும். இவ்விரதத்தால் கஷ்டங்கள் விலகி ,மங்களம் உண்டாகும். வெள்ளிக்கிழமை விரதமும் விநாயகருக்குரிய விரத நாளாகும். கணபதியை முழுமுதற்கடவுளாக வழிபடுவோர் கனாபத்யர் என்றழைக்கப்படுவர். விநாயகரின் ஐந்து கரங்களும் ஐந்து தொழில்களைக்குறிக்கிறது.
- அங்குசம் - அழித்தல்
- பாசம் - படைத்தல்
- மோதகம் - அருளல்
- எழுத்தாணி - காத்தல்
- தும்பிக்கை - மறைத்தல்
விநாயகரை வணங்க மொன்றுமுறை நெற்றியில் குட்டிக்கும்பிடுவது வழமை. அழிவைத்தருபவர் ஞானவிநாயகன எனப்படுவார். தெளிவான அறிவைத்தரவும் இறை ஞானத்தை ஏற்படுத்தவும் குட்டிக்கும்பிடப்படும். தோப்புக்கரணம் போட்டுவழிபடுவதும் மிகமுக்கியமாகும் "த்வாப்யாம் கர்ண" என்பது தோப்புகரணம் என மருவி வழங்கப்படுகிறது. இரண்டு காதுகளையும் வலதுகை இடது காதையும் , இடதுகை வளதுகாதையும் மாறி மாறிப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்தும் எழுந்தும் செய்யும் வணக்கம் தோப்புக்காரணமாகும் இது மூன்றுமுறை செய்யப்படவேண்டும்,
விநாயகரின் திருமேனிகள் 32 எனவும் 16 எனவும் புராணங்கள் விவரிக்கின்றன.
››››› விநாயகருக்கு பிடித்தவையும் பலன்களும் ‹‹‹‹‹
| கரும்பு | - பித்தத்தை அகற்றும் |
| எள்ளு | - இரும்புச்சத்து தரும் |
| அவல் | - சத்துணவு |
| பொரி | - தாகம் தணிக்கும் |
| தேங்காய் | - இரத்த சுத்தம், மூளை வளர்ச்சி |
| மாத்துளை | - பித்த நீக்கம, வயிற்று கோளாறு நீக்கம் |
| விழம்பழம் | - இரத்த சுத்தி, மூளை விருத்தி , பித்த நீக்கம் |
| நாவற்பழம் | - குளிர்ச்சி தரும், கண்ணெரிச்சல் நீக்கம் |
| மோதகம் | - புரதம் |
››››› விநாயகருக்கு பிடித்தமான உணவுப்பண்டங்கள் ‹‹‹‹‹
| கரும்பு | அவரை | பழவகை | சர்க்கரை |
| பருப்பு | நெய் | எள் | பொரி |
| அவல் | பச்சையரிசி | வெள்ளரிப்பழம் | மோதகம் |
| கிழங்கு | கடலை | அன்னவகை |
››››› விநாயகரூபங்களும் பலன்களும் ‹‹‹‹‹
| ஏகாஷரகணபதி | - கணபதி அருள் கிடைக்க |
| மகாகணபதி | - பரிபூரண சித்தி |
| மோகனகணபதி | - எல்லா உலகத்தையும் காப்பாற்று |
| ருணகரகணபதி | - கடன் நீங்க |
| மகா வித்தியாகணபதி | - தேவி அனுக்கிரகம் பெற |
| ஹரித்ரா கணபதி | - உலக வசியம் பெற |
| நிதிகணபதி | - நிதி வளம் கிடைக்க |
| பாலகணபதி | - சந்தோசம் |
| சக்திகணபதி | - சர்வ காரியமும் சித்தி பெற |
| ஷிப்ர பிரசாதகணபதி | - துரித பலன்பெற |
| உச்சிஷ்டகணபதி | - மனச்சாந்தி |
| வீரகணபதி | - தைரியம் பெற |
தொகுப்பு : இரா பத்ம குமரக் குருக்கள்