திருத்தல நித்திய நைமித்தியக் கிரியைகள்
இந்து திருத்தலங்களில் நித்திய நைமித்தியக் கிரியைகள் யாவும் சைவாகம முறைகளுக்கு அமைய நடைபெற்று வருகின்றன. அதற்கமைய கொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவானேஸ்வரர் ஆஅலயத்திலும் நித்திய நைமித்தியக் கிரியைகள், பூசைகள் யாவும் சைவாகம முறைப்படி இனிதே நடைபெற்று வருகின்றன. இக்கால கட்டத்தில்,சமூக சமய கலாசார மட்டத்தில் இயல்பாக எழுந்த விழிப்புணர்ச்சி காரணமாக நாடெங்கிலும் பல கோயில்கள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டும் கட்டப்பட்டும், குடமுழுக்குச் செய்யப்பட்டும், வழிபாட்டு முறைகள் அனைத்திற்கும் புத்துயிர் அளிக்கப்பட்டும் புதுமெருகுடன் முன்னெடுத்துச் செல்லப்பட்டன. பக்த கோடிகள் தம்மை சமய கிரியா அனுஷ்டானங்களுடன் இணைத்து அவற்றில் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் வாழ முற்பட்டனர்.
உச்சிக்காலப் பூஜை
உச்சிக் காலப் பூஜை 11.30 மணியளவில் நடைபெற்று கோயில் திருக்கதவுகள் மூடப்படுகின்றன.
சாயரட்டைப் பூஜை
மாலை 5 மணிக்கு சாயரட்டைப் பூசைகளுக்கான அபிஷேகங்கள் நடைபெற்றுச் சாயரட்டைப் பூஜைகள் இடம்பெறுகின்றன.
இரண்டாம் காலப் பூஜை
இந்து திருத்தலங்களில் நித்திய நைமித்தியக் கிரியைகள் யாவும் சைவாகம முறைகளுக்கு அமைய நடைபெற்று வருகின்றன. அதற்கமைய கொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவானேஸ்வரர் ஆஅலயத்திலும் நித்திய நைமித்தியக் கிரியைகள், பூசைகள் யாவும் சைவாகம முறைப்படி இனிதே நடைபெற்று வருகின்றன.
இக்கால கட்டத்தில்,சமூக சமய கலாசார மட்டத்தில் இயல்பாக எழுந்த விழிப்புணர்ச்சி காரணமாக நாடெங்கிலும் பல கோயில்கள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டும் கட்டப்பட்டும், குடமுழுக்குச் செய்யப்பட்டும், வழிபாட்டு முறைகள் அனைத்திற்கும் புத்துயிர் அளிக்கப்பட்டும் புதுமெருகுடன் முன்னெடுத்துச் செல்லப்பட்டன. பக்த கோடிகள் தம்மை சமய கிரியா அனுஷ்டானங்களுடன் இணைத்து அவற்றில் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் வாழ முற்பட்டனர்.
அர்த்தசாம பூஜை
அர்த்த சாம பூஜை இரவு 8 மணிக்கு ஆரம்பமாகி சிவன் அம்பாளுக்கு பூஜைகள் நிகழ்ந்த பின்னர், திருப்பல்லக்கில் மங்கள வாத்தியம், சங்கு, சேமக்கலம் சகிதம் உள்வீதியிலே திருமுறைப் பாராயணத்துடன் சுவாமியும் அம்பாளும் வலம்வந்து பள்ளியறையில் திருவூஞ்சலில் எழுந்தருளுவர். அர்த்தசாமப் பூஜையில் விசேஷமாக பேரிகை முழங்கப்படுவது சிறப்பம்சமாகும்
ஆலய பூசைகள் நேர அட்டவணை
| காலைப் பூஜை |
: காலை 5.30 மணிக்கு |
| காலைச்சாந்திப் பூஜை |
: காலை 6.30 மணிக்கு |
| உச்சிக்காலப் பூஜை |
: காலை 11.30 மணிக்கு |
| சாயரட்டைப் பூஜை |
: மாலை 5.00 மணிக்கு |
| இரண்டாம் காலப்பூஜை |
: மாலை 6.30 மணிக்கு |
| அர்த்த சாமப்பூஜை |
: இரவு 8.00 மணி முதல் |